தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் சமந்தா அண்மையில் தான் மயோசிட்டிஸ் நோயில் இருந்து மீண்டு வந்தார். இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது ஜிம் ஒர்கவுட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வரும் சமந்தா, தற்போது தன்னுடைய ஸ்டோரியில் ஒரு போட்டோவை பதிவுசெய்துள்ளார்.

அதாவது, கையில் புதியதாக ஒரு மோதிரத்தை அணிந்திருக்கும் போட்டோவை அவர் வெளியிட்டிருக்கிறார். நேற்று சிவராத்திரி ஸ்பெஷலாக சமந்தா இப்புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் என தெரிகிறது. நடிகை சமந்தாவின் நடிப்பில் உருவாகி அடுத்ததாக வெளிவர இருக்கும் திரைப்படம் “சாகுந்தலம்” ஆகும்.