கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில், புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது திடீரென விடுதியில் தீப்பிடிக்க, சில நொடிகளிலேயே கண் இமைக்கும் நேரத்தில் அந்த விடுதி முழுவதும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் உள்பட 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்