கனடாவின் கியூபெக் மாகாணத்தை சேர்ந்தவர் மைக்கேல் சவோய். இவருக்கு லாட்டரியில் இந்திய மதிப்பில் ரூ. 6,07,86,619 பரிசு விழுந்துள்ளது. கூரையை பிய்த்து கொண்டு அதிர்ஷ்டம் கொட்டிய நிலையில் தனது வேலையை உடனடியாக அவர் ராஜினாமா செய்துள்ளார். அவர் கூறும் போது, “பரிசு பணத்தை வைத்து ஓய்வு காலத்தை வசதியாக அனுபவிக்க முடியும். அதிர்ஷ்டம் அடித்தவுடன் முதலில் என் சகோதரியிடம் தான் தகவலை கூறினேன்” என்றார்.