குழந்தை பிறப்புக்கு பிறகு…. படப்பிடிப்பில் 15 மணி நேரம் செலவிடும் நடிகை காஜல் அகர்வால்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர்தான் நடிகை காஜல் அகர்வால். இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் குழந்தை பிறப்புக்கு பிறகு தான் அதிக நேரம் படப்பிடிப்பில் செலவிடுவதாக காஜல் அகர்வால் கூறியுள்ளார். திருமணம் ஆகி குழந்தை பிறக்கையில் நடிப்புக்கு இடைவெளி விட்டவர் தற்போது கோஷ்டி திரைப்படத்தின் மூலம் மீண்டும் களம் இறங்கியுள்ளார். நாள் ஒன்றுக்கு படப்பிடிப்பில் மட்டுமே 15 மணி நேரம் செலவிட்டதாகவும் சில புது விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார். இவர் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.