குழந்தைகளை ஆதரவின்றி விட்டு செல்லும் பெற்றோருக்கு உதவ “குழந்தை பெட்டி” என்ற புதிய முன்னெடுப்பை தொடங்க உள்ளதாக இலங்கை குழந்தைகள் நலத்துறை அறிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், குழந்தைகளை விட்டு செல்லும் பெற்றோர்களின் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் கடந்த 6 வருடங்களில் பல காரணங்களுக்காக 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த ‘குழந்தை பெட்டி’ திட்டத்தின் மூலம் பல குழந்தைகளின் வாழ்க்கை மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.