தமிழக அரசு ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் உள்ள மொத்த்ம் 203 காலிப்பணியிடங்களை 122 ஓட்டுநர் பணியிடங்களையும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் மொத்தமுள்ள 800 காலுப்பணியிடங்களில் 685 காலிப்பணியிடங்களை ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை கொண்டு நிரப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி சி, ஓ பி சி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 45 வயது உட்பட்டவராக இருக்க வேண்டும். 18 மாதங்கள் கனரக வாகனங்களை ஓட்டிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் தலைமையில் தேர்வு குழு நியமிக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.