பிரபல இந்தி நடிகையான ஷில்பா ஷெட்டி, தமிழில் பிரபுதேவா உடன் “மிஸ்டர் ரோமியோ” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். இப்போது “இந்தியன் போலீஸ் போர்ஸ்” எனும் வெப் தொடரில் அவர் நடித்து உள்ளார். இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கும் இத்தொடர் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஷில்பா ஷெட்டியின் வீடு மும்பை ஜுஹு பகுதியில் அமைந்திருக்கிறது.

இவர் தன் பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்தினருடன் இத்தாலி நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்த நிலையில் அவரது வீட்டிலுள்ள விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஷில்பா ஷெட்டியின் தரப்பில் ஜுஹு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.