
76-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தோனேசிய அதிபர் பிராபோவோ சுபியாண்டோ வருகிற 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இந்தியாவிற்கு வர உள்ளார். அவர் டெல்லியில் நடைபெறும் 76 வது குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தோனேஷியா அதிபராக பிராபோவோ சுபியாண்டோ பதவி ஏற்றார். அவர் முதல் முறையாக இந்தியாவிற்கு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.