தமிழகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு அனைத்து பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்களும் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் சுதந்திர தின விழாவில் பட்டியல் இன தலைவர்கள் கொடியேற்றுவதில் 15 இனங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆய்வறிக்கை வந்தது.

இதேபோன்று குடியரசு தின விழாவிலும் 15 இனங்கள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் தொடர் நடவடிக்கைகள் எடுத்து பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்து பிரச்சினைகள் வராமல் பாதுகாக்க வேண்டும். ஜனவரி 26 -ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் கிராம சபை கூட்டத்தில் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் மரியாதையோடு நடத்தப்பட வேண்டும். மேலும் இது தொடர்பான புகைப்படங்களை உடனுக்குடன் அரசுக்கு  அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.