கர்நாடக மாநிலம் பெங்களூரில் கீழே கடந்த சோப்பை மிதித்து வழுக்கி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் டிஜே.ஹள்ளி காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட கனக் நகர் பகுதியில் 27 வயது இளம்பெண் ஒருவர் தன்னுடைய வீட்டின் மூன்றாவது தளத்தில் துணிகளை உலர்த்திக்கொண்டு இருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக தரையில் கிடந்த சோப்பு மீது கால் வைத்த நிலையில் வழுக்கி கட்டிடத்தின் மேலிருந்து கீழே விழுந்தார். அவர் கீழே விழுந்த போது உடன் இருந்த கணவர் அந்த பெண்ணை காப்பாற்றுவதற்கு எவ்வளவோ முயற்சி செய்து முடியவில்லை. இந்த சம்பவம் தொடர்பான காட்சியை தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.