தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளிலும் நாயகியாக நடித்து வந்த ஊர்வசி தற்போது துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். காமெடி, எமோஷனல் என அனைத்து கதாபாத்திரங்களும் நல்ல வரவேற்பு பெற்று வரும் இவர் சமீபத்தில் வெளியான ஜே பேபி படம் அவருக்கு பெரிய பாராட்டுகளை பெற்றுக் கொடுத்தது. அண்மையில் தன்னுடைய சினிமா அனுபவங்கள் குறித்து அவர் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அப்போது, மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரவில்லை என்று கூறி தமிழிலிருந்து தான் மலையாள சினிமாவுக்கு சென்றதாக சுட்டிக்காட்டினார்.

தமிழில் ஊர்வசி என்று பெயர் வைத்தது அதன் பிறகு தான் மலையாள சினிமாவிற்கு சென்றதாக கூறி அப்போது என்னுடைய உடம்பை பார்த்து பாலிவுட் நடிகைகள் போல் இருந்ததால் தமிழ், இந்தியில் தான் முதல் வாய்ப்பு கேட்டார்கள். அதனால் தனக்கு நல்ல கேரக்டர்கள் பண்ண வேண்டும் என்று கிளாமர் ரோல் வேண்டாம் என்று இருந்ததாக கூறிய ஊர்வசி, அதன் காரணமாக தெரிந்து சினிமாவிலிருந்து ஒதுக்கி வந்ததாக கூறியுள்ளார். மேலும் கமல் சார் தான் தன்னிடம் ஊர்வசி நீங்க நல்ல கேரக்டர் பண்ண ஆசைப்படுறீங்க. லவ், சீன், கிளாமர் சீன் பண்ண கூச்சமா இருக்கு . கொஞ்சம் மலையாளத்தில் கவனம் செலுத்துங்கள் என்று கூறி நல்ல வாய்ப்பு வந்தால் விட்டு விடாதீர்கள் என்று அட்வைஸ் செய்தார் என்று கூறியுள்ளார்.