கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நவீன் என்ற 27 வயது இளைஞருக்கும் லித்திகா என்ற 19 வயது பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணத்திற்குப் பிறகு தம்பதிகள் இருவரும் உறவினர்களுடன் மண்டபத்தில் சிறிது நேரம் இருந்துள்ளனர். அதன் பிறகு மண்டபத்திலிருந்து மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினரை நபியின் அவரது உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தம்பதியருக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் வீட்டில் புதுமண தம்பதிகள் பேசிக் கொண்டிருந்த போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இருவரும் ஒரு அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டனர். அப்போது கத்தியை எடுத்து நவீன் லித்திகாவை சரமாரியாக சுத்தியுள்ளார். இதில் லித்திகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நவீனுக்கும் கத்திக்குத்து ஏற்பட்ட நிலையில் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.