இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரித்திகா சிங். இந்த படத்திற்காக இவர் பல்வேறு விருதுகளை வாங்கிய நிலையில் மீண்டும் ஒரு துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹரிஷ்வர்தன் இயக்கத்தில் உருவாக்கியுள்ள இன் கார் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ரித்திகா சிங் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை பதைபதைக்க வைத்துள்ளது. அதில் சில மோசமான ஆட்களால் ரித்திகா காரில் சித்திரவதை அனுபவிக்கிறார். இது போன்று நடக்குமா என ரசிகர்களை பயம்படுத்திய இயக்குனர் தனது உறவினர் ஒருவருக்கு நேர்ந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்த படத்தை எடுத்துள்ளேன் என கூறியுள்ளார்.