
இலங்கை கிரிக்கெட் வீரர் மகேஷ் தீக்ஷனா. சுழற்பந்து வீச்சாளரான இவர் சிஎஸ்கே அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர். இந்நிலையில் மகேஷ் தீக்ஷனாவின் திருமணம் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. தனது நீண்ட நாள் காதலியான ஆரத்திகாவை தீக்ஷனா திருமணம் செய்து கொண்டுள்ளார்.
நட்சத்திர வீரர்கள் பலர் கலந்து கொண்ட தீக்ஷனா ஆர்த்திகா திருமண புகைப்படங்களை சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. சிஎஸ்கே அணிக்காக விளையாடி வந்த மகேஷ் தீக்ஷாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4.40 கோடிக்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.