பெண் ஒருவருக்கு தன்னுடைய கணவர் கொடுத்த பணத்தின் மூலமாக 8 கோடி ரூபாய் லாட்டரி பரிசு கிடைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாபைச் சேர்ந்தவர் பயல். இவர் தன்னுடைய கணவர் 12 வருடங்களாக தனக்கு பரிசாக கொடுக்கும் பணத்தில் லாட்டரி வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் தன்னுடைய கணவர் திருமண நாள் பரிசாக கொடுத்த பணத்தை வைத்து துபாயின் பியூட்டி ஃப்ரீ டிரா என்ற லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார் .

இதனை அடுத்து இவருக்கு அதிர்ஷ்டம் அளிக்கும் விதமாக சுபா 8 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. இதனால் இவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து இவர் கூறுகையில் இந்த பணத்தை தன்னுடைய குழந்தைகளின் கல்வி செலவுக்காக பயன்படுத்த போவதாக தெரிவித்துள்ளார்.