கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முரசொலி இதழில் தமிழ் திரை உலகத்தின் பார்வையில் கலைஞர் என்ற தலைப்பில் நடிகர் ரஜினிகாந்த் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், கலைஞரின் வாழ்க்கை ஒரு சிறந்த புத்தகம் என்று இயக்குனர் எஸ் பி முத்துராமன் கலைஞரைப் பற்றி நிறைய தகவல்களை எனக்கு கூறியுள்ளார். அவர் என்னிடம் கூறிய போது கலைஞர் மீது இருந்த மதிப்பும் மரியாதையும் அதிகமானது. சிவாஜி, எம்ஜிஆர் புகழின் உச்சிக்குச் செல்ல முக்கிய காரணம் கலைஞர் தான் என்று ரஜினி அதில் குறிப்பிட்டுள்ளார்.