தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் டைரக்டர் அட்லீ. இவர் திரையுலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார். ராஜா ராணி எனும் திரைப்படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமான அட்லீ, பின் தெறி, மெர்சல், பிகில் தற்போது ஜவான் என பிரம்மாண்ட படங்களை இயக்கி இருக்கிறார்.

நடப்பு ஆண்டில் ஷாருக்கானை வைத்து தான் இயக்கியுள்ள ஜவான் படம் வெளியாகிவிடும் என அட்லீ அறிவித்து உள்ளார். கடந்த 2014ம் வருடம் அட்லீக்கு, பிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது பிரியா கர்ப்பமாக இருக்கிறார். அண்மையில் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் ஒரு அழகிய போட்டோ ஷுட்டும் எடுத்தனர். தற்போது அந்த போட்டோஷுட் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Amrita Samant (@mommyshotsbyamrita)