
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த வித்தியாசாகர் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் வித்யாசாகர் நுரையீரல் தொடர்பான பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சுவாச பிரச்சனை காரணமாக போராடி வந்த தன்னுடைய கணவருக்கு மாற்று நுரையீரல் கிடைக்க போராடி வந்தார்.
ஆனால் காலதாமதம் காரணமாக நுரையீரல் கடக்காமல் போனதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது மீனா தன்னுடைய கணவர் இறந்த சோகத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார். அண்மையில் கூட தன்னுடைய உடலை தானம் செய்வதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் எப்போதும் தன்னுடைய செல்ல மகளான நைனிகாவின் பிறந்தநாளை உற்சாகமாக நடிகை மீனா கொண்டாடும் நிலையில் தற்போது முதல் முறையாக கணவர் இல்லாமல் மகளுக்கு மிக கோலாகலமாக கப்பலில் கொண்டாடியுள்ளார். 2011 ஆம் வருடம் ஜனவரி ஒன்றாம் தேதி அன்று நைனிகாவுகு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கப்பலில் மகளின் அருமையான வீடியோ ஒன்றை வெளியிட்டு மீனா வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
Fly high my baby, sky is not the limit. May you always shine like the sun and illuminate the lives of those around you. Happy birthday to the love of my life ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ pic.twitter.com/0XBtc1HTKP
— Meena Sagar (@Actressmeena16) January 1, 2023