தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு தனுஷ் நடித்த நானே வருவேன் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது கேப்டன் மில்லர் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது படத்திற்காக சாதாரணமான முறையில் செட் போடப்பட்டதாக கூறப்படுகிறது. நடிகர் தனுஷுக்கு கோபத்தை ஏற்படுத்த பிரம்மாண்டமான படத்துக்கு இவ்வளவு சாதாரணமாக செட் போடாமல், ஒழுங்கான முறையில் செட் போடுங்கள் என்று இயக்குனரிடம் கூறியுள்ளாராம். அதோட பிரம்மாண்டமான முறையில் செட் போட்டுவிட்டு தன்னை படப்பிடிப்புக்கு அழைக்குமாறு தனுஷ் கூறி விட்டு கோபத்துடன் கிளம்பி சென்றதாக ஒரு அதிர்ச்சி தகவல்களை வந்துள்ளது. மேலும் இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியாத நிலையில் இது தொடர்பான விளக்கம் கூடிய விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.