ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒண்டிக்காரன்பாளையம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுவிட்டு வீட்டிற்கு முன்புறம் பழனிசாமி கட்டியுள்ளார். இந்நிலையில் அதிகாலை 2 மணிக்கு திடீரென வந்த 4-க்கும் மேற்பட்ட திற நாய்கள் கன்று குட்டியையும், நாடுகளையும் கடித்து குதறியது. அந்த சத்தம் கேட்டு ஓடி வந்த பழனிச்சாமி நாய்களை விரட்டி அடித்தார். ஆனால் நாய்கள் கடித்து குதறியதில் ஒரு கன்று குட்டி, நான்கு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கூறும்போது, தெரு நாய்களின் எண்ணிக்கை எங்கள் பகுதியில் அதிகமாக இருக்கிறது. தொடர்ந்து கால்நடைகளை கடித்து வருகிறது. இதனால் குழந்தைகளை வெளியில் விளையாட விட அச்சமாக இருக்கிறது. எனவே மாநகராட்சி நிர்வாகத்தினர் பிற நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.