மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை பகுதியில் கூட்டுறவு வங்கியின் முன்னால் சிஇஓ ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு வயது 66. இவர் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது கடந்த 2016 ஆம் ஆண்டு பெண் ஒருவர் வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது லோன் தொடர்பான நடைமுறையில் சில ஆவணங்கள் முழுமை பெறாமல் இருந்த நிலையில் அந்த பெண்ணின் வீட்டிலும் சோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அவர் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றார். அப்போது அந்தப் பெண் அவருடன் கட்டாய உடலுறவு வைத்தார். பின்னர் ரூ.3 லட்சம் அந்தப் பெண்ணுக்கு லோன் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஒரு மாதத்திற்கு பிறகு அந்த பெண் அவருடன் இருந்த நிர்வாண படங்களை அனுப்பி குடும்பத்திற்கு புகைப்படங்களை அனுப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அதோடு ரூ.8 கோடி பணம் கேட்டும் மிரட்டியுள்ளார். முதலில் அவர் ரூ.5 லட்சம் கொடுத்த நிலையில் 108 தவணைகளாக கடந்த 2017 முதல் 2023 வரை‌ ரூ.4.39 கோடி கொடுத்துள்ளார். இறுதியாக அந்த பெண் ரூ‌.5 லட்சம் கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த நபர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 45 வயது பெண்ணை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.