கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப்-2 படங்களின் வாயிலாக இந்தியளவில் பிரபலமானவர் தான் கன்னட நடிகர் யாஷ். கேஜிஎஃப் முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 2-ஆம் பாகம் கடந்த வருடம் வெளிவந்து எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றிபெற்றது.

இந்த நிலையில் யாஷ் கே ஜி எஃப் 2 படத்திற்கு பின் இதுவரை தன் அடுத்த படத்தை கமிட் செய்யவில்லை என்பதே தற்போதைய நிலவரம். ஒருவேளை மீண்டும் பிரஷாந்த் நீல் டைரக்டில் நடிக்கவே அவர் காத்திருக்கிறாரோ என பலரும் சந்தேகிக்கின்றனர். அது ஒருவேளை கேஜிஎஃப்-3 ஆக கூட இருக்கலாம். ஆகவே யாஷுடைய அடுத்த படத்தை யார் இயக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.