சென்னையில் உள்ள பாலவாக்கம் பகுதியில் ஓய்வு பெற்ற ஐஜி மாணிக்கவேல் வீடு அமைந்துள்ளது. இவருடைய வீட்டில் நேற்று சுமார் 7 மணி நேரமாக சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அதாவது சிலை கடத்தல் பிரிவு ‌ முன்னாள் டிஎஸ்பி காதர் பாட்ஷாவை பொய் வழக்கில் கைது செய்ததாக கடந்த 2023 ஆம் சிபிஐ வழக்கு பதிவு செய்த நிலையில் தற்போது அதற்காக பொன் மாணிக்கவேல் வீட்டில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த சோதனை முடிவடைந்த பிறகு பொன் மாணிக்கவேல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, என் மீது ஓராயிரம் வழக்குகள் இருக்கிறது. எனவே சாகும் வரை என்னிடம் விசாரணை நடத்திக் கொண்டே இருப்பார்கள். மேலும் நானே என்னுடைய ஆவணங்களை எடுத்துச் செல்லுங்கள் என்று அவர்களிடம் கூறியுள்ளேன் என்று கூறினார்..