பாதத்தில் பலத்த வலியால் தவித்துக் கொண்டிருந்த யானை ஒன்றுக்கு, நபர் ஒருவர் செய்த பேரன்பான உதவி ஒட்டுமொத்த நெட்டிசன்களின் நெஞ்சையும் நெகிழ வைத்து வருகிறது.
அந்த யானையின் பாதத்தில் ஆணி ஒன்று மிக ஆழமாகக் குத்தியதால், நடக்க முடியாமல் மிகுந்த வேதனையோடு தவித்து நின்றது. அந்த வலியை உணர்ந்த அந்த நபர், சற்றும் பயப்படாமல் அந்த யானையின் மிக அருகில் சென்றுள்ளார்.
அந்த யானையும் தனக்கு உதவத்தான் அவர் வருகிறார் என்பதைப் புரிந்து கொண்டது போல, தன் காலை அமைதியாகத் தூக்கிக் காட்டியுள்ளது. உடனே அந்த நபர் தன்னிடம் இருந்த ஸ்க்ரூடிரைவர் கருவியைக் கொண்டு, அந்த யானையின் பாதத்தில் ஏறியிருந்த ஆணியை மெதுவாகச் சுற்றி வெளியே எடுத்துள்ளார்.
This is pure humanity! ❤️
வலி தாங்க முடியாமல் தவித்த இந்த யானைக்கு உதவிய இவரின் செயல் நெஞ்சை நெகிழ வைக்கிறது. pic.twitter.com/fcuDK9VXuS
— Aadhavan® (@aadaavaan) July 3, 2026
“>
ஆணி வெளியே வந்ததும் அந்த யானை அடைந்த நிம்மதியும், அந்த மனிதரின் அசாத்திய துணிச்சலும் தற்போது சமூக வலைதளங்களில் பட்டிதொட்டியெங்கும் வைரலாகி பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.
