ஐபிஎல் 17-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ராஜஸ்தான் அணியும் 2-ம் இடத்தில் கொல்கத்தா அணியும் இருக்கிறது. இதைத் தொடர்ந்து புள்ளி பட்டியலில் 3 முதல் 10 இடங்கள் முறையே சென்னை, ஹைதராபாத், லக்னோ, குஜராத், பஞ்சாப், மும்பை, டெல்லி மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் இருக்கிறது. நடப்பு தொடரில் பெங்களூரு அணி இதுவரை நடைபெற்ற 7 போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வி அடைந்ததால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது கடினமான ஒன்றாக மாறியுள்ளது.

இந்நிலையில் ஆர்சிபி அணியின் ஆல்ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் இருந்து தான் விலகுவதாக அறிவித்துள்ளதோடு, என்னுடைய உடல் நலம் மற்றும் மனநலனில் முன்னேற்றம் ஏற்பட்ட பிறகு மீண்டும் போட்டியில் விளையாடுவேன் என்றும் அறிவித்துள்ளார். மேலும் இந்த போட்டியில் தன்னால் சரியான முறையில் விளையாட முடியாததால் தான் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும், தனக்கு பதில் வேறொரு வீரர் விளையாடுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.