கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் 1 முதல் 3- ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆரோக்கியசாமி, ராஜு, உதவிய திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனியாபிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களை எவ்வாறு கற்றுக் கொடுக்க வேண்டும்? கற்றல், கற்பித்தல், துணைக்கருவிகள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி கையேடுகளை எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வட்டார கல்வி அலுவலர்கள் அண்ணாதுரை, தஸ்விகா, ஆசிரியர் பயிற்றுநர்கள் மலர்கொடி, குப்புசாமி, சரசு, பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.