அதிமுக கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி திமுக வாரிசு அரசியல் செய்வதாகவும் திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது என்றும் 2026 ஆம் ஆண்டு தேர்தலுடன் திமுகவின் ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் கூறினார். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது விஜய் அதிமுகவை ஏன் விமர்சிக்கவில்லை என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு இபிஎஸ் கூறியதாவது, விஜய் அதிமுகவை விமர்சிக்காததை நினைத்து எல்லோரும் துடிக்கிறார்கள். உங்களுக்கு ஏன் இவ்வளவு கஷ்டம். அதிமுக மக்களுக்காக உழைக்கிற கட்சி. அதிமுகவை குறை சொல்வதற்கு எதுவுமே கிடையாது.

அப்படி இருக்கும்போது விஜயால் எப்படி அதிமுகவை பற்றி விமர்சிக்க முடியும் என்று கூறினார். மேலும் ஏற்கனவே ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு என்று அறிவித்த விஜய் மறைமுகமாக 2026 தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் நடிகர் விஜய்யை பற்றி அதிமுகவினர் விமர்சிக்க வேண்டாம் என்று ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது விஜய் அதிமுகவை விமர்சிக்காததோடு இன்று நடைபெற்ற தமிழக வெற்றி கழக செயற்குழு கூட்டத்தில் கூட திமுக அரசுக்கு எதிராக தான் தீர்மானங்களை நிறைவேற்றினார். இதன் மூலம் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக வெற்றி கழகம் மற்றும் அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.