சவுதி அரேபியாவில் புதிய மெகா திட்டத்தின் படி எம்பயர் ஸ்டேட்ஸ் கட்டிடத்தை விட 20 மடங்கு பெரிய உட்புற சூப்பர் நகரத்தை உருவாக்குவதே ஆகும். இந்த திட்டத்திற்கு முகாப் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் பொருள் கனசதுரம் எனப்படும். மேலும் இது சொந்த உள்கட்டமைப்பு போக்குவரத்து அமைப்பை கொண்டதாகவும் விமான நிலையத்திலிருந்து 20 நிமிட பயணத்தில் செல்லக்கூடியதாகவும் இருக்கும்.
இந்த மிஷன் ரியாத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள கிங் சல்மான் மற்றும் கிங் காலி சாலைகளில் அமைய உள்ளது. மேலும் இந்த புதிய நகரம் 104000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 9000 ஹோட்டல் அறைகள் மற்றும் பிற வசதிகளுடன் அமைய இருக்கின்றது. குறிப்பாக இந்த திட்டத்தை புதிய முராப்பா டெவலப்மென்ட் நிறுவனம் உருவாக்க உள்ளது.