தென் இந்திய திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராகிய ஹன்சிகா சில நாட்களுக்கு முன்னதாக தன் காதலரை கரம் பிடித்தார். ஜெய்ப்பூரில் ஒரு கோட்டையில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் ஹன்சிகா திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் நான் முன்பு ஒரு முறை ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். அது முறிந்தவுடன், மீண்டும் ஒரு ரிலேஷன்ஷிப் வந்தால் அந்த நபரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முடிவெடுத்தேன், இப்போது அது நடந்துவிட்டது என ஹன்சிகா கூறியுள்ளார். ஒரு பேப்பரும் பேனாவும் இருந்தால் அடுத்தவர்கள் வாழ்க்கையை நாசமாக்க முடியும் என நினைக்கிறார்கள். அதனால், திருமணத்திற்கு கொஞ்சநாள் முன் வரை பதற்றமான மனநிலையில் இருந்தேன் என்றார்.