
பெங்களூரு ராமமூர்த்தி நகர் அருகே ஒரு கட்டடம் கட்டப்படுகிறது. இங்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் குமார் என்பவர் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். கடந்து சில நாட்களுக்கு முன்பு 6 வயது சிறுமி அந்த கட்டடத்தின் முதல் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அபிஷேக்குமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதற்கிடையே சிறுமியை தேடி வந்த தாய் அபிஷேக் குமாரையும், தனது மகளின் நிலையையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கோபத்தில் அபிஷேக்குமாரின் தலையில் மரக்கட்டையால் தாக்கினார். இதனால் அபிஷேக்குமார் மயங்கி விழுந்தார். அதன் பிறகு தனது மகளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அபிஷேக் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.