இந்தி திரை உலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஆயிஷா ஜூல்கா. இவர் விலங்குகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். இதனால் தன்னுடைய வீட்டில் ஒரு நாய்க்குட்டியை செல்லமாக வளர்த்து வந்துள்ளார். அந்த நாய்க்குட்டிக்கு ராக்கி என்று பெயர் வைத்துள்ளார். இந்த நாய்க்குட்டி கடந்த 2020-ம் ஆண்டு அவருடைய வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது.

இதனால் பராமரிப்பாளர் ஆண்ட்ரு தான்  நாயை கொன்று  இருப்பார் என்று கூறி நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார். ஆனால் அவர் நாய் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கூறினார். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் மூச்சு திணறல் ஏற்பட்டதால் தான் நாய் இறந்ததாக அறிக்கை வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடரப்பட்டு 4 வருடங்கள் ஆகும் நிலையில் வழக்கை இழுத்தடித்து வருவதாக கருதி ஹைகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் வாயில்லா ஜீவனை கொன்றவர்க்கு உரிய தண்டனை கொடுக்க வேண்டும் என தன் மனுவில் ஆயிஷா குறிப்பிட்டுள்ளார்.