இயக்குநர் கெளதம் மேனன் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் வெளியீடு குறித்து புலம்பியுள்ளார். இந்த விஷயம் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து இருக்கும் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. இவரது இயக்கத்தில் நீண்ட நாளாக வெளிவராமல் காத்திருக்கும்படம் தான் ‘துருவ நட்சத்திரம்’. இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், சிம்ரன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர்.

இந்த விஷயம் குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, “உங்களைப் போலவே நானும் அதன் வெளியீட்டிற்கு காத்திருந்தேன். ஆனால், அது நடக்காது என்ற போது என் இதயம் நொறுங்கி விட்டது. இந்தப் படத்திற்காக முதலீடு செய்தவர்களை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை. அது ஒரு கெட்ட கனவாக இருந்தது” எனப் புலம்பியுள்ளார்.