தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் வருகிற 6-ம் தேதி கலந்து கொள்ள இருக்கிறார். இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொள்வதாக இருந்த நிலையில் பின்னர் அவர் கலந்து கொள்ளவில்லை என்று அறிவித்தார். அதாவது கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று விஜய் அறிவித்த நிலையை திருமாவளவன் ஏற்கனவே ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று வலியுறுத்தி வருவதால் விஜயுடன் திருமாவளவன் கை கோர்க்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது.

தேவையில்லாத வியூகங்களுக்கு வழி வகுக்கக் கூடாது என்பதாலும் திமுக அழுத்தம் கொடுப்பதாலும்தான் திருமாவளவன் கலந்து கொள்வதாக செய்தி பரவிய நிலைகள் நேற்று வன்னியரசு அம்பேத்கரை ஒரு கையிலும் பகவத் கீதையும் மற்றொரு கையிலும் வைத்துக்கொண்டு சமரச பாயாசம் கிண்டுபவரோடு எப்படி மேடையை பகிர்ந்து கொள்ள முடியும் என்பதால் தான் திருமாவளவன் நிகழ்ச்சியை தவிர்த்ததாக கூறினார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன் விஜயுடன் கலந்து கொள்ளாததற்கான காரணத்தை தற்போது விளக்கியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, யாதும் உணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதும் அறிந்தே தவிர்த்தோம். என்னை ஒரு கருவியாக கொண்டு அரசியல் எதிரிகள் காய் நகர்த்த முயற்சிக்கிறார்கள். திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்ற செயல் திட்டத்தோடு செயல்படுகிறார்கள். திருமாவளவனை விட்டுவிட்டு பதிப்பகம் எதற்காக விழாவை நடத்துகிறது என்று யாருமே கேட்கவில்லை.

விஜய் மட்டும் போதும் திருமா வேண்டாம் என்று பதிப்பகம் முடிவு செய்ததை பற்றி யாரும் அலசவில்லை. திருமா வருத்தப்பட்டாலும் வருத்தப்படட்டும் என்று எப்படி இலகுவாக நகர முடியும். பகைவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகி விடக்கூடாது என்றுதான் முடிவெடுக்க முடியும். திருமாவளவன் யாரும் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது என்று கூறினார். மேலும் விஜயுடன் திருமாவளவன் ஒன்றாக கலந்து கொள்ளாததற்கான விளக்கத்தை தற்போது அவர் கூறியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.