சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் பதவி காலம் பத்தாம் தேதியுடன் முடிவடைகிறது. 9, 10 தேதி நீதிமன்றத்திற்கு விடுமுறை என்பதால் நேற்று ஓய்வு பெற்றார். அவர் கடைசியாக ஒரு வழக்கிற்கு தீர்ப்பளித்துவிட்டு பிரியாவிடை நிகழ்ச்சியில் பேசினார். அவர் கூறியதாவது, இந்த நீதிமன்றம் என்னை தொடர்ந்து பயணிக்க வைத்தது. நீதிமன்றத்தில் யாரையாவது நான் காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் இந்த நீதிமன்றத்தை விட்டு வெளியேறும்போது எந்த வித்தியாசமும் எடுக்கப்போவதில்லை. ஏனென்றால் நீதிபதி சஞ்சீவ் கன்னாவை போன்ற ஒரு உறுதியானவர் பொறுப்பேற்கிறார். அவர் மிகவும் கண்ணியமானவர் என சந்திர சூட் பேசியுள்ளார்.