காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு 75 வயது ஆகும் நிலையில் இன்று உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார். அவருடைய மரணத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இன்று அவருடைய உடல் சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து அவருடைய உடல் நாளை தகனம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் தற்போது இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர். அனைவராலும் போற்றப்படக்கூடிய ஒருவர். பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்த நண்பர். எப்போதும் தன் மனதில் பட்டதை பேசக்கூடிய பண்புக்கு சொந்தக்காரர். திருமகன் ஈவேரா இறந்ததிலிருந்தே அவர் மனதளவில் உடைந்து போயிருந்தார். இளங்கோவனின் மறைவு அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது என்னை சந்திக்க வேண்டும் என்று கூறினார். நான் அவரை காண மருத்துவமனைக்கு சென்றபோது பேசும் நிலைமையில் அவர் இல்லை. மேலும் அவருடைய மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.