ரத்னம் பட ப்ரோஷன் வேலைக்காக சேலம் வந்திருந்த நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நான் 2026ம் ஆண்டு அரசியலுக்கு வருவதாக கூறி இருக்கிறேன். அரசியல் கட்சிகளிடம் நான் வைக்கும் கோரிக்கை ஒன்றுதான். என்னை அரசியலுக்கு வர விடாதீர்கள்.

மக்களுக்கு நீங்களே நல்லது செய்தால் நான் அரசியலுக்கு வர வேண்டிய அவசியமே இருக்காது. என்னை போன்றவர்கள் எப்போதும் போல் வாக்காளர்களாகவே இருந்து கொள்வார்கள் என கூறியுள்ளார்.