
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இதனால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 45 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தோல்விக்கு நடிகை விஜயலட்சுமி அவரது பாணியில் வாழ்த்து கூறியுள்ளார்.
தனது சாபம் சீமானை எந்த காலத்திலும் ஜெயிக்க விடாது என விஜயலஷ்மி கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஈரோடு மக்கள் சீமானுக்கு செருப்படி கொடுத்துள்ளதாகவும் கடுமையாக சாடியுள்ளார். தனக்கு துரோகம் செய்த சீமானுக்கு லட்சுமியும் கிடைக்காது, வெற்றியும் கிடைக்காது என அந்த வீடியோவில் பேசியுள்ளார். சீமான் குறித்து விஜயலட்சுமி பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.