இங்கிலாந்தின் மான்செஸ்டரில் அனிகா ரோஸ் என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் அரவணைப்பு நிபுணர் ஆவார். இந்த நிலையில் தனிமையில் இருக்கும் பலர் ஆறுதலுக்காக அனிகாவை தேடி செல்கின்றனர். அனிகாவின் அரவணைப்பும் கொஞ்ச நேரம் கம்பெனியும் பலருக்கு ஆறுதல் அளிக்கிறது.
இந்த நிலையில் கட்டிப்பிடிக்கவும், ஆறுதல் கூறவும் ஒரு மணி நேரத்திற்கு அனிகா 7,400 ரூபாய் கட்டணம் வாங்குகிறார். இவரது ஹக்கிங் சிகிச்சையால் மன அழுத்தம் குறைவதாகவும், மகிழ்ச்சி அதிகரிப்பதாகவும் அனுபவம் பெற்றோர் கூறுகின்றனர்.