உத்திரபிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சரின் மூக்கை மக்கள் உடைத்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று முன்தினம் முகமதுபூர் கதார் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சஞ்சய் நிஷாத் பங்கேற்றார். இவரது மகன் பிரவீன் கபீர்நகர் பாஜக எம்.பியாக உள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் சஞ்சய் நிஷாத் நிகழ்ச்சியி கலந்துகொண்டிருந்தபோது அங்கிருந்த மக்கள், உங்கள் மகன் தொகுதிக்கு என்ன செய்தார் என கேள்வி எழுப்பி கைகலப்பிலும் ஈடுபட்டனர். இதில், அமைச்சரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது