தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை நேற்று கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் நிற்கும் திமுக வேட்பாளரை ஆதரித்து அனைத்து தலைவர்களும் பிரச்சாரம் செய்வோம். தேர்தலில் போட்டியிடுவது என்பது ஜனநாயக நாட்டில் அந்தந்த கட்சிகளின் உரிமை. அதைப் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. தமிழக மக்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க தயாராக இருப்பதால் கண்டிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் பெருவாரியான வாக்குகளில் வெற்றி பெறுவார் என்று கூறினார்.

அதன்பிறகு நடிகர் விஜயை இந்தியா கூட்டணிக்கு அழைத்ததற்கான காரணம் பற்றியும் கூறினார். அதாவது நடிகர் விஜயின் கொள்கை, கோட்பாடு மற்றும் சமூக நீதி பேசுவது என அனைத்தும் இந்தியா கூட்டணி கொள்கைகளோடு ஒத்துப்போவதால் தான் அவரை இந்தியா கூட்டணியில் வந்து இணையுமாறு அழைத்ததாக கூறினார். மேலும் விஞ்ஞானம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் காலத்தில் கோமியம் குடிங்கள் என்று கூறுவது அனைவரையும் முட்டாளாக்குவதற்கான பாஜகவின் அரசியல் என்பது தெளிவாக தெரிகிறது என்றும் கூறினார்.