கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன்புதான் மாவட்ட தலைவராக பொறுப்பேற்ற அருண், உடனே பல மாவட்ட நிர்வாகிகளை மாற்றியதாக கூறப்படுகிறது. இது வாக்குவாதமாகி ஒரு கட்டத்தில் கைகலப்பானது. ஒருவரை ஒருவர் நாற்காலிகளால் தாக்கிக் கொண்டனர். பின்னர் போலீசார் நிலைமையை கட்டுப்படுத்தி நிர்வாகிகளை வீட்டுக்கு அனுப்பினர். இதில், நாற்காலிகளை தூக்கி எறிந்து ஆக்ரோஷமாக தாக்கிக்கொண்டனர்.

சீலிங் பேன் சேதமாகும் அளவுக்கு பயங்கர மோதல் ஏற்பட்ட நிலையில், வீடியோவை பகிர்ந்த காயத்ரி ரகுராம் “எங்க அந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்?” என்று அண்ணாமலையை கிண்டலடித்தது வைரலாகி வருகிறது