ஊழியர்களை தொடர்ந்து ரோபோக்களையும் கூகுள் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. கூகுள் நிறுவன அலுவலக வளாகத்தில் கதவை திறப்பது, டேபிள்களை துடைப்பது, குப்பைகளை அகற்றுவது நாற்காலிகளை வரிசைப்படுத்துவது என அன்றாட பணிகளை செய்ய ரோபோக்கள் களமிறக்கப்பட்டன.
சுமார் நூறு ரோபோக்களை கூகுள் ரிசர்ச்சில் இருக்கும் ரோபோட்டிக்ஸ் முயற்சிகளில் ஒருங்கிணைக்கப்படும் என்று அந்நிறுனத்தின் தகவல் தொடர்பு இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் செலவுகளை குறைக்க தங்களது பணியாளர்களை பணி நீக்கம் செய்து வருவதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.