உலகில் மனிதர்கள் உயிர் வாழ ஆக்ஸிஜன் தேவையானதாக இருக்கிறது. பொதுவாக காடுகள் ஆக்ஸிஜனை வெளியிட்டு கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது. இந்நிலையில் காடுகளே இல்லாத நாடுகள் இருக்கிறது என்று சொன்னால், உங்களால் நம்ப முடியுமா. ஆம் அது உண்மைதான். அதாவது உலகில் இரு நாடுகளில் இயற்கையாக காடுகள் இல்லாததால் அவர்கள் செயற்கை காடுகளை உருவாக்கியுள்ளனர்.

அதன்படி கத்தார் நாட்டில் காடுகள் இல்லை. இந்த நாடு முதலில் பாலைவனமாக இருந்த நிலையில் தற்போது பல்வேறு விதமான ஆடம்பர பங்களாக்கள் மற்றும் உயரமான கட்டிடங்கள் இங்கு வந்துள்ளது. இங்கு இயற்கை காடுகள் இல்லாததால் அவர்கள் தங்களிடம் இருக்கும் வளங்களை வைத்து செயற்கை காடுகளை உருவாக்கியுள்ளனர். இதேபோன்று கிரீன்லாந்து நாட்டிலும் காடுகள் கிடையாது. பெயரிலேயே கிரீன் என்று பசுமையை வைத்துள்ள இந்த நாட்டில் பனி படர்ந்துள்ளது. மேலும் இதனால் சுற்றி பனிமூட்டத்தை தவிர காடுகளை பார்க்கவே முடியாது.