பொதுவாகவே உறைந்து போன ஏரி மிகவும் குளிர்ச்சி அதிகமாக இருக்கும். அந்த குளிரை மனிதர்கள் தாங்குவது மிகவும் கடினம். இந்த நிலையில் இணையத்தில் வெளியான ஒரு வீடியோவில் ஒரு நாய் அந்த உறைந்து போன ஏரியில் மாட்டிக் கொள்கிறது. இந்த நாய்க்குட்டியை நிலை அறிந்து தீயணைப்பு வீரர் ஒருவர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த நாயை காப்பாற்றுவதற்காக சறுக்கிய படி சென்று காப்பாற்றியுள்ளார்.

இந்த வீடியோவை பார்க்கும் பொழுது உண்மையில் மனிதாபிமானம் என்பது யாருக்கும் வரலாம் ஆனால் அது எல்லோரிடத்திலும் வருவது என்பது தான் முக்கியம். அந்த நபர் நாய் பக்கத்தில் சென்றதும் எந்த பதட்டமும் இல்லாமல் நாயை காப்பாற்றி உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.