உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் பலரை மருத்துவர்கள் காப்பாற்றுகிறார்கள். அதனால்தான் எல்லாரும் மருத்துவர்களை கடவுளாகக் கருதுகிறார்கள். இது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. குழந்தை ஒன்று உயிரிழந்து பிறந்துள்ளது. எந்த வித சலனமும் இல்லாத நிலையில் இருந்துள்ளது.

இதனால் அந்த குழந்தைக்கு மருத்துவர் உடனடியாக சிபிஆர் செய்தார். செயற்கை சுவாசம் கொடுத்து குழந்தையை சுவாசிக்க வைத்தார். இது எப்போது, ​​எங்கு நடந்தது என்பது தெரியவில்லை. இந்த விடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.