உலக அளவில் பல துறைகளில் தற்போது ரோபோக்களின் சேவை என்பது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒரு உணவகத்தில் பெண் ஒருவர் ரோபோ போன்று உணவுப் பரிமாறிய காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது சீனாவில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு பெண் பணிபுரிந்து வருகிறார். இவர் ரோபோ போன்று கடைக்கு வந்த கஸ்டமர் களுக்கு உணவு பரிமாறியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியான நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் பார்ப்பதற்கு உண்மையான ரோபோ போன்று அந்தப் பெண் செய்யும் காட்சிகள் அனைத்தும் துல்லியமானதாக இருக்கிறது.