கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி வினோபா நகரில் தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மம்தா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த தாஸ் பக்கத்து வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து வந்து தனது மனைவியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த மம்தாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மம்தா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தாசை தேடி வந்தனர். நேற்று முன்தினம் பாலாஜி நகர் பகுதியில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் கிடப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அங்கு சென்று பார்த்த போது சடலமாக மீட்கப்பட்டவர் தலைமறைவாக இருந்த தாஸ் என்பது தெரியவந்தது. அவர் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துள்ளார். அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.