மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூரில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்கல் சூலையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த செவ்வாய் கிழமை சரவணன் கொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சரவணனின் மனைவி ஜோதிகாவிடம் விசாரணை நடத்தினர். ஜோதிகாவுக்கு வலசை பகுதியைச் சேர்ந்த உடப்பன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ள காதலாக மாறியது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.

இரு தரப்பிடமும் பேசி ஜோதிகாவை ஒரு வாரத்திற்கு முன்பு தான் உறவினர்கள் சரவணன் உடன் சேர்த்து வைத்தனர். அதன் பிறகும் ஜோதிகாவும் உடப்பணும் சந்தித்தனர். இதனை சரவணன் கண்டித்துள்ளார். இதனால் ஜோதிகா தனது கணவரை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார். சம்பவம் நடந்த அன்று மது குடித்துவிட்டு போதையில் சரவணன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது உடப்பன் தனது நண்பருடன் இணைந்து வீட்டிற்குள் புகுந்து சரவணனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இது வழக்கில் ஜோதிகா, உடப்பன் அவரது 17 வயது நண்பர் ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.