திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குறிச்சி குளத்தில் 9 வயது சிறுவன் வசித்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் போலீசார் சிறுவனை சடலமாக மீட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் மாயாண்டி என்பவர் சிறுவனை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டது தெரியவந்தது.
அப்போது சிறுவன் மயங்கி விழுந்தார். இதனால் மாயாண்டி சிறுவன் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இது தொடர்பான வழக்கு திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.