இந்தோனேசியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடியை கௌரவிக்கும் வகையில் அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோ சிறப்பு மதிய விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த விருந்தின் போது பேசிய அதிபர் பிரபோவோ, பிரதமர் மோடியின் அரசியல் பயணத்தையும் அவரது திட்டங்களையும் தான் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், “இந்தியாவும் இந்தோனேசியாவும் ஒரே மாதிரியான பின்னணியையும், சவால்களையும் கொண்ட நாடுகள். கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் மோடியின் திட்டங்கள் பெரிய வெற்றியைத் தந்துள்ளன.

எனவே, உங்களது பல மக்கள் நலத் திட்டங்களை நான் அப்படியே எனது நாட்டிலும் நகலெடுத்து  செயல்படுத்தி வருகிறேன். அதை பகிரங்கமாக ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை; அது எங்கள் நாட்டிலும் நல்ல பலனைத் தந்து வருகிறது” என்று மனமாறப் பாராட்டினார்.

இதனைத் தொடர்ந்து, இருநாட்டு உறவை மேம்படுத்தியதற்காகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தோனேசியாவின் மிக உயரிய சிவிலியன் விருதான ‘பிந்தாங் அதிபூர்ணா’  பதக்கத்தை அதிபர் பிரபோவோ சுபியாண்டோ வழங்கி கௌரவித்தார்.